ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் தொடங்கும் - தமிழக அரசு

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 23ம் தேதி முதல் தொடங்கும் - தமிழக அரசு

டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி

பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும்  அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் பயிற்றுவிக்கப்பட உள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களான சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி மற்றும் நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேற்படி பயிற்சி முறையே 500 மற்றும் 300 தேர்வர்கள் பயிற்சிக்காக அனுமதிக்கப்பட உள்ளளர்.

  தேர்வர்கள் சேர்க்கைக்காக இணைய வழியாக 27 -04-2022 முதல் 11-05-2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.  இதன் மூலம் 2000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

  இப்பயிற்சிக்கு, தெரிவு தொடர்பான விபரங்களை www.civiliservicecoaching.com என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். தெரிவு செய்யப்பட்டோருக்கு அழைப்புக் கடிதங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அழைப்புக் கடிதத்தினை பதிவிறக்கம் செய்து அந்தந்த பயிற்சி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அவசியம் எடுத்துவர வேண்டும்.

  TNPSC Current affairs 10: சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு

  விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை குறித்த நாள், நேரம் ஆகியன அழைப்பு கடிதங்களில் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் அஞ்சல் வழி மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும் போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் தயாராகும் வகையிலும் TNPSC IV தேர்வுக்கு ஒரு நாள் ஊக்க முகாம் நடைபெற உள்ளது.

  TNPSC Current Affairs 8: பத்ம விருதுகள் முதல் மிதக்கும் காற்றாலை வரை... முக்கியத் தலைப்புகள் இங்கே

  மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் நடத்தப்பட்ட தேர்வில்  வெற்றி பெற்று, தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் குரூப் 4 தேர்வுக்கு  பயிற்றுவிக்கப்பட உள்ளது. மேற்படி தேர்விற்கு வாராந்தோறும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டு,  தேர்வர்களின் நிலை வெளியிடப்படும்.

  TNPSC Current Affairs 9: மத்திய மாநில உறவுகளில் கவனிக்க வேண்டிய சில முக்கியத் தலைப்புகள்

  காத்திருப்பு தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான நாட்கள் காலியிடங்களுக்கு ஏற்ப  இணையவழியாக தெரிவிக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகள் 23-05- 2022 முதல் தொடங்கப்பட உள்ளது.

  இவ்வாறு, தமிழ்நாடு அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Group 4, TNPSC