Home /News /employment /

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை: அரசு பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுப்பு அரசாணை வெளியீடு

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை: அரசு பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் விடுப்பு அரசாணை வெளியீடு

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அக்குழந்தை பிறந்த நாளிலிருந்து விடுப்பு வழங்கலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு  வழங்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் அரசு பள்ளி பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 12 மாத (360 நாட்கள்) மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோன்று, குழந்தைகளை தத்தெடுப்பு செய்யும் அரசுப் பணியாளர்களுக்குத் தத்தெடுப்பு விடுப்பாக 270 நாட்கள் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், 2022-23ம் ஆண்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கையின் போது ," மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. அவ்வாறு மாற்று கருவறை தாயின் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன்,  அவர்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்” என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.

    இந்நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாணையை  தமிழக அரசு வெளியிட்டது. இதன் மூலம்,  தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும்.

    இதையும் வாசிக்கதமிழகத்தில் ஓராண்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள்: RTI தரவுகள் சொல்வதென்ன?

    மேலும், இவ்விடுப்பு அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும்  பொருந்தும் என்றும்; மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான ஒப்பந்தத்தை சட்ட ரீதியாக பதிவு செய்து இருத்தல் வேண்டும் என்றும், குழந்தை பிரசவித்த மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்றும்;   மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அக்குழந்தை பிறந்த நாளிலிருந்து விடுப்பு வழங்கலாம் என்றும்; இவ்விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் வழங்கப்படும் உள்ளிட்ட நிபந்தனைகள் விடுக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government Employees, Maternity outfits

    அடுத்த செய்தி