Home /News /employment /

மீனவர் நலத்துறையில் ரூ.50, 400/- சம்பளத்தில் வேலை.... விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

மீனவர் நலத்துறையில் ரூ.50, 400/- சம்பளத்தில் வேலை.... விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

மீன்வன உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள்

மீன்வன உதவியாளர் நிரந்தர காலிப்பணியிடங்கள்

TN Fisheries Department Recruitment 2022 : மேற்கண்ட 2 பணியிடங்களுக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்கவும் ...
    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாகவுள்ள 02 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்தப்படவுள்ளது. மீன்வள உதவியாளர் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

    மேலும் நீச்சல், மீன்பிடிப்பு. வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும் மற்றும் மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு 13.09.2021 அன்றுள்ளபடி கணக்கிடப்படும் சம்பள விகிதம் ரூ.15900 - 50400

    1. மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர் வயது வரம்பு 18 முதல் 34 வரை - 1

    2. பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) 1 பெண்கள் - ஆதரவற்ற விதவை முன்னுரிமையற்றவர் வயது வரம்பு 18 முதல் 34 வரை - 1

    மேற்கண்ட 2 பணியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இணையதள முகவரி :

    https://drive.google.com/file/d/11Jk7xI7iXeyjHWa5afDTCh3Hfga4z-XQ/view

    நேர்முக தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி