• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை ... 58000/- வரை சம்பளம்

தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை ... 58000/- வரை சம்பளம்

தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர்  வேலை

தமிழக மீன்வளத் துறையில் அலுவலக உதவியாளர் வேலை

TN Fisheries Department Recruitment 2021 : தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாடு மீன்வளத்துறையில் 08.07.2021 அன்று வெளியிடப்பட்ட விளம்பர அறிவிப்பின்படி 1.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஏ) (முன்னுரிமை பெற்றவர்) வயது வரம்பு (32), 2. பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்கள் தவிர) (முன்னுரிமை பெற்றவர்) வயது வரம்பு (32), 3.பொதுப்போட்டி (முன்னுரிமை அற்றவர்) வயது வரம்பு (32), 4.ஆதிதிராவிடர் (முன்னுரிமை பெற்றவர்) வயது வரம்பு (35), 5.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் (முன்னுரிமை அற்றவர்) வயது வரம்பு (32) ஆகிய இன
    சுழற்சி முறையின்படி பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    அரசு ஆணை (நிலை) எண்.75 மனித வள மேலாண்மை துறை நாள்.26.07.2021 மற்றும் அரசாணை (நிலை) எண்.91 மனிதவள மேலாண்மைத் துறை நாள். 13.09.2021-ன் படி வ.எண். 1 மற்றும் 3-க்கு மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க
    தேவையில்லை. விண்ணப்பங்கள் பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி.10.11.2021. பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் தமிழக மீன்வளத் துறை
    வேலையின் பெயர் அலுவலக உதவியாளர்
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 05 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 18 – 32 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி (இ.எஸ்.எல்.சி). மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ.15700-58000/-
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 21.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 10.11.2021
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No Fees
    இணையதள முகவரி https://www.fisheries.tn.gov.in/LatestNews
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகம்,
    ஒருங்கிணைந்த கால்நடைபராமரிப்பு,
    மீன்வளம் மற்றும் மீனவர்
    நலத்துறை அலுவலக வளாகம்,
    நந்தனம்,சென்னை-35

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒன்றுக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக மீன்வளத் துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • விண்ணப்பதாரர்கள் Offline மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    • விண்ணப்பிப்பதற்கு முன் அறிவிப்பை முழுமையாகப் படியுங்கள்.

    • விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.

    • உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து

    • சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .

    • எதிர்கால பயன்பாட்டிற்காக நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    • கீழ்கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.


    முகவரி : மண்டல இயக்குனர், இந்திய மீன்வள ஆய்வு, மீன்பிடி துறைமுக வளாகம், ராயபுரம், சென்னை- 600013.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/OA_Post-Advertisement_-_Fisheries.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: