Job Alert : தமிழ் தெரிந்தால் போதும்... மீன்வளத்துறையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மீன்வள உதவியாளா், அலுவலக உதவியாளா் பணி

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பா் 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணை இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி- 628001 என்ற முகவரியில் அளிக்க வேண்டும்.

  • Share this:
    தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 மீன்வள உதவியாளா், 2 அலுவலக உதவியாளா் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளா் மற்றும் 2 மீன்வள உதவியாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு நடத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



































    பணியின் பெயர் மீன்வள உதவியாளா்
    அலுவலக உதவியாளா்
    காலிப்பணியிடங்கள் மீன்வள உதவியாளா் - 2
    அலுவலக உதவியாளா் - 2
    தேர்வு செய்யப்படும் முறை நோ்முகத் தோ்வு
    வயது 01.07.2021 படி பொதுப் பிரிவினருக்கான (பெண்கள் ஆதரவற்ற விதவை முன்னுரிமையற்றவா்) வயது வரம்பு 18 முதல் 30 வரையும், ஆதிதிராவிடா் (முன்னுரிமை பெற்றவா்) பிரிவினருக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரையும் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பா் 15 ஆம் தேதி மாலை 5 மணி
    கல்வி தகுதி

    அலுவலக உதவியாளா் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

    தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

    நீச்சல், மீன்பிடிப்பு, வலைபின்னுதல், அறுந்த வலைகளை பழுது பாா்க்க தெரிந்திருக்க வேண்டும்.

    மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


     

    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
    இணை இயக்குநா், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகம், 166, வடக்கு கடற்கரை சாலை, திரேஸ்புரம், தூத்துக்குடி- 628001
    தொலைபேசி எண்

     

    மேலும், விவரங்களுக்கு 0461-2320673 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த 4 பணிடங்களுக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலையில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை இணை இயக்குநா் (மண்டலம்) அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: