ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னை நியூ கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்: 5000 காலியடங்கள் நிரப்பு முடிவு

சென்னை நியூ கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்: 5000 காலியடங்கள் நிரப்பு முடிவு

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாம்

அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறவனத்தின் வாயிலாக பதிவுகள் செய்யப்பட உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள தி நியூ கல்லூரியில் வரும் 15ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

  சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் இந்த  மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில்  500-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

  வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 15.10.2022

  இடம்: இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரி

  கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐடிஐ, டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

  இதையும் வாசிக்க: விரிவுபடுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை : வேலைவாய்ப்பு நிலவரங்கள் என்ன?

  இம்முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுயவிவரக் குறிப்புடன் (Bio-Data) நேரில் வருகைப்புரிய வேண்டும்.

  இதையும் வாசிக்கதேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் சுமார் 5 லட்சம் காலியிடங்கள் : விண்ணப்பிப்பது எப்படி?

  மேலும், முகாமில் வருகைப்புரியும் வேலைநாடுநர்களுக்கு கூடுதலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்கு பதிவுகள் செய்து, திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அயல்நாட்டில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறவனத்தின் வாயிலாக பதிவுகள் செய்யப்பட உள்ளதுதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவிதுள்ளது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Employment, Employment and training department