பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (DBCWO) சார்பில் பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்டந்தோறும் இந்த துறையின் கீழ் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
2022ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அண்மையில் வெளியிட்டது. அதன்படி தமிழகமெங்கிலும் காலியாக உள்ள 175 பகுதி நேர சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மே 30ஆம் தேதிக்குள்ளாக தொடர்புடைய அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
பணி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கப் பெறுகிறது. காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதி, வயது வரம்பு, அனுபவம் மற்றும் இதர தகுதிகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
ALSO READ | வங்கிப் பணிகளில் தமிழ் கட்டாயம் இல்லை - 50% வெளிமாநிலத்தவர்கள் நியமனம்
பணி நியமன நடவடிக்கை நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் நியமிக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் வேலை வழங்கப்படும்.
ஊதியம் மற்றும் இதர விவரங்கள்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் நியமிக்கப்படும் பகுதி நேர சுகாதாரப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஊதியம் வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரம்
- கோயம்புத்தூர் - 13 பணியிடங்கள்
- கிருஷ்ணகிரி - 34பணியிடங்கள்
- சிவகங்கை - 36பணியிடங்கள்
- பெரம்பலூர் - 11பணியிடங்கள்
- நாகப்பட்டினம் - 14பணியிடங்கள்
- தருமபுரி - 04பணியிடங்கள்
- திருவள்ளூர் - 18பணியிடங்கள்
- கடலூர் - 19பணியிடங்கள்
- அரியலூர் - 11பணியிடங்கள்
- புதுக்கோட்டை - 15பணியிடங்கள்
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை:
- தொடர்புடைய மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையதள பக்கத்திற்கு செல்லவும்.
- பணி நியமனம் தொடர்பான விளம்பரத்தில் கிளிக் செய்யவும்.
- இதில் வரும் அறிவிக்கையை பார்த்து, தகுதி விவரங்களை சரிபார்க்கவும்.
- விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து, அதில் கேட்கப்படுள்ள விவரங்களை நிரப்பவும்.
- பெயர், வயது, கல்வித் தகுதி போன்ற தகவல்களை கொடுப்பதுடன், அவற்றை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.
- கடைசி தேதி நிறைவடைவதற்கு முன்பாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.