நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வெப்சைட், தனியார் வேலைவாய்ப்பு வெப்சைட் தொடக்கம்

நீட் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஆன்லைன் பயிற்சி இணைய பக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

நீட் தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வெப்சைட், தனியார் வேலைவாய்ப்பு வெப்சைட் தொடக்கம்
முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)
  • Share this:
நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி இணைய பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. Ambhisoft technologies நிறுவனத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி பெற இதுவரை 7,420 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய நான்கு பாடங்களுக்கும் தினமும் 4 மணி நேரம் பயிற்சியும், 4 மணி நேரம் தேர்வும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு தனியார்துறை வேலை ஆணையம் என்ற இணையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.www.tnprivatejobs.tn .gov.in என்ற இணைய பக்கத்தில் உள்ள இணையவழி நேர்காணல், இணையவழி பணி நியமனம் போன்ற வசதிகளை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading