Home /News /employment /

காவல் நிலையத்தில் வரவேற்பாளர்: 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய முதல்வர்

காவல் நிலையத்தில் வரவேற்பாளர்: 912 பேருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிய முதல்வர்

முதல்வர் மு.க ஸ்டாலின்

முதல்வர் மு.க ஸ்டாலின்

பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 912 பேருக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல்நிலைய வரவேற்பாளர் (Data Entry Assistant/Receptionist) பணியிடங்களுக்கு நியமன ஆணைகள் கடந்த 27ம் தேதி   வழங்கப்பட்டது.

    இதன் அடையாளமாக, சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 

    கடந்த 2021-22ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையில், காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் குறைகளை கனிவோடு கேட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் அறிவித்தார். மேலும், இதற்கு பல  ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேருக்கு கருணை அப்படையில் பணிநியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 

    அந்த அறிவிப்பின்படி, காவல்நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 1132 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக 457 ஆண்கள் மற்றும் 455 பெண்கள் என மொத்தம் 912 வாரிகதார்களுக்கு தகவல் பதிவு உதவியாளர்/காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடத்திற்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.  

    இதையும் வாசிக்கதொடரும் மருத்துவ மாணவர்கள் தற்கொலை - காரணங்களும்,தீர்வுகளும்

     இவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்கள் மற்று இரமில்வே காவல் நிலையங்களில் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Published by:Salanraj R
    First published:

    Tags: CM MK Stalin, Police

    அடுத்த செய்தி