20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - 9 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு -  9 தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (கோப்பு படம்)
  • Share this:
தமிழகத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2019 உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றபோது தமிழக அரசிற்கும், பல்வேறு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 9 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.


ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திட்ட 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

மேலும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் புதிய லோகாவையும்,தொழில் நிறுவனங்களுக்கான குறைதீர்க்க உதவும் தொழில் நண்பன் இணையதளத்தினையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், வெவ்வேறு காரணங்களால் கடந்த காலங்களில் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் சென்ற நிறுவனங்கள் கூட தற்போது தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளை பார்த்து மீண்டும் தொழிலை தொடர்த்து நடத்த முன் வந்துள்ளதாக தெரிவித்தார். வெளிநாட்டில் வசித்து இங்கு தொழில் தொடங்க விரும்பும் தமிழர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, 60 கோடி ரூபாய் மதிப்பில் 3 உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும், 28.43 கோடி ரூபாய் மதிப்பில் 2 புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தமும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகின. அத்துடன் டி.ஆர்.டி.ஓ மற்றும் ஐ ஐ டி சென்னை இடையே தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
First published: December 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading