ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எஸ்எஸ்சி போட்டித் தேர்வுக்கென தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ முயற்சிகள் சில

எஸ்எஸ்சி போட்டித் தேர்வுக்கென தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வ முயற்சிகள் சில

காட்சிப் படம்

காட்சிப் படம்

தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  நடைபெற உள்ள எஸ்எஸ்சி போட்டித் தேர்வுக்கு, குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் தயாராகும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

  நாட்டின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சம்பள நிலை 4,5,6,7  பணியிடங்களுக்கான அறிவிப்பை முன்னதாக தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான,    கல்வித்தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன், 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

  SSC : 20,000 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட மத்திய பணியாளர் தேர்வாணையம்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

  பொதுவாக,  எஸ்எஸ்சி போட்டித் தேர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வு,தென் மாநிலங்களை விட வட மாநில இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது. தமிழ்நாடு இளைஞர்கள் பெருமளவு தனியார் துறைக்கே அதிக முக்கியத்துவம்  கொடுத்து வந்தனர். தனிநபர் வருமானம், வேலைவாய்ப்பின்மை விகிதம், உயர்கல்விக்கான  வாய்ப்பு, தனியார் துறை வளர்ச்சி, பொருளாதார  கட்டமைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது.

  இருப்பினும் சமீப காலமாக, மத்தியப் பணியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த விழ்ப்புணர்வு தமிழ்நாட்டில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை, நன்குணர்ந்த தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதுகுறித்து, இங்கு காணலாம்.

   tamilnaducareerservices.tn.gov.in: 

  எஸ்எஸ்சி தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் "tanëeducareerservibes.tn.gov.ir' என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

  இந்த இணையதளம் அரசு வேலை பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் இவ்விணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயனடையலாம்.

  கல்வித் தொலைக்காட்சி:

  தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

  இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (SSC-CGL) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை  7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.

  ' isDesktop="true" id="812297" youtubeid="u6bhgi3aTZw" category="employment">

  கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் TN Career Services Employment' என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

  தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர்' தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.

  மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையை அணுகலாம்.

  அந்தந்த, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் தொடர்புக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Examination, Recruitment