திருவாரூர் மாவட்ட காசநோய் மையத்தில் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor - STS) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணி, முற்றிலும் தற்காலிகமாக 11 மாத ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது.
இந்த பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவது தொடர்பாக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இருசக்கர வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். தேசிய சுகாதார இயக்கத்தின் வழிமுறைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
2. இந்நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. எந்நிலையிலும், பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது
3. வயது வரம்பு 45-க்குள் இருக்க வேண்டும்.
தகுதியுடையவர்கள் விண்ணப்பத்துடன் சுய கையொப்பமிட்ட கல்விச் சான்றிதழ் நகல்கள், ஆதார் நகல், சாதி சான்றிதழ் நகல், ஓட்டுனர் உரிமம் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கையொப்பமிட்ட விண்ணப்பக்கடிதத்தை வரும் 16.03.2023 ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், திருவாரூர்-610001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.