ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

அரசு சுகாதார அலுவலகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு சுகாதார அலுவலகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு சுகாதார நலப்பணிகள் கழகம்

அரசு சுகாதார நலப்பணிகள் கழகம்

Tiruvannamalai District Job news: 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai |

    திருவண்ணாமலை இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலியிடங்கள் விவரம்: 

    1.  கணக்கு உதவியாளர் - 1

    கல்வி தகுதி: Tally படிப்புடன் B.com முடித்திருக்க வேண்டும்.

    மாதச் சம்பளம்: ரூ.16,000 /-

    2. பிசியோதெரபி சிகிச்சை அளிப்பவர் (Physiotherapist)

    கல்வி தகுதிபிசியோதெரபி  படிப்பில் இளம்நிலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும்.

    மாதச் சம்பளம்: ரூ.13,000 /-

    3. நகர்ப்புற சுகாதார மேலாளர்/ சுகாதார செவிலியர்

    கல்விதகுதி: செவிலியர் படிப்பில் பிஎஸ்சி/எம்எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    மாதச் சம்பளம் ரூ.25,000

    நிபந்தனைகள்:

    1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

    2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-

    கௌரவ செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,

    மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),

    துணை சுகாதார பணிகள் அலுவலகம்,

    பழைய அரசு மருத்துவனை வளாகம், செங்கம் சாலை,

    திருவண்ணாமலை.

    இதையும் வாசிக்க: அரசு மருத்துவமனையில் உதவியாளர் பணி - 10ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. தேர்வு இல்லாமல் நேரடி நியமனம்

    மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 02.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும் 05.12.2022 அன்று நேர்முகத்தேர்வு நடத்தப்படும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் வாசிக்க: சொந்த முயற்சியில் தரமான ரெஸ்யூம் தயார் செய்வது எப்படி?

    Published by:Salanraj R
    First published:

    Tags: Tamil Nadu Government Jobs