ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சமூக பாதுகாப்பு துறையில் டேட்டா அனலிஸ்ட் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

சமூக பாதுகாப்பு துறையில் டேட்டா அனலிஸ்ட் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு செய்தி

வேலைவாய்ப்பு செய்தி

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 16ம் தேதி மாலை 05.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur |

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் (Data Analyst) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்தகவல் பகுப்பாளர் (Data Analyst)
துறைசமூக பாதுகாப்பு துறை, திருப்பூர்   திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
 ஒப்பந்தம்முற்றிலும் ஓராண்டு கால தொகுப்பூதிய அடிப்படையில் ( மாதத்திற்கு ரூ. 18,536)
பணி எண்ணிக்கை1
கல்வித்தகுதிஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து புள்ளியியல்/கணிதம்/ பொருளாதாரம்/ கணினி (BCA) பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்
அனுபவம்வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
கணினி அறிவுகணினி பயன்பாட்டில் திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும் (Proficiency in computer)
வயது40 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்ப செயல்முறைடிசம்பர் 10

மேற்கண்ட பணியிடம் திருத்தப்பட்ட Mission Vatsalya வழிகாட்டு நெறிமுறைகளின்படி, முற்றிலும் தற்காலிகமான ஒரு வருட கால் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடமாகும். இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாகக் கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட பணியிடத்திற்கு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

இதையும் வாசிக்க: சொந்த முயற்சியில் தரமான ரெஸ்யூம் தயார் செய்வது எப்படி?

தங்கள் விண்ணப்பங்கள் அனைத்து கல்விச்சான்று நகல்கள், அனுபவச்சான்று மற்றும் புகைப்படத்துடன் டிசம்பர் 10ம் தேதி மாலை 05.30 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எண்.0421-2971198-க்கு தொடர்பு கொள்ளவும்.

இதையும் வாசிக்க: வேலை தேடுபவரா நீங்கள்..! 40,000 காலியிடங்கள் - தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

மேலும்,  இதற்கான விண்ணப்பங்கள் https://tiruppur.nic.in என்ற திருப்பூர் மாவட்ட இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Recruitment