ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திருப்பூர் சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்கள்: நேர்காணல் அடிப்படையில் நியமனம்

திருப்பூர் சுகாதாரத் துறையில் பல்வேறு பணியிடங்கள்: நேர்காணல் அடிப்படையில் நியமனம்

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்ட நலச் சங்கம்  வரும் 14ம் தேதியன்று  நேர்காணல் (Walk In Interview)  நடத்துகிறது.  விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice category/recruitment/  என்ற முகவிரியில் பதிவிறக்கம் செய்யலாம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruppur, India

  திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, துணை இயக்குநர் காதாரப் பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும்.    திருப்பூர் மாவட்ட நலச் சங்கம்  (District Health Society) வரும் 14ம் தேதியன்று  நேர்காணல் (Walk In Interview)  நடத்துகிறது.  எனவே, தகுதியான நபர்கள் இந்நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  பணியின் பெயர், காலியிடங்கள்: அடிப்படை தகுதிகள் , தெரிவு செய்யப்படும் முறை உள்ளிட்ட விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

  நிபந்தனைகள்:

  இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertakings) அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்கTNPSC, IPBS உள்ளிட்ட போட்டி தேர்வுகளை எழுதுபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்கு தான்

  நேர்கானல் நடைபெறும் நாள் மற்றும் இடம்:

  அறை எண். 240-DME ;  120- DPH/DMS

  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

  பல்லடம் ரோடு, திருப்பூர் - 641 604 14

  நாள். 14.10.2022 மற்றும் நேரம் : 10.00 மு.ப.

  தொலைபேசி எண். 0421-2478500

  விண்ணப்ப படிவங்களை https://tiruppur.nic.in/notice category/recruitment/  என்ற முகவிரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன், இப்பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment