Aavin Job alerts: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் நடைபெருகிறது. ஆர்வமுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பித்து பலனடையலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, திருப்பூர் ஒன்றிய ஆவின் பொதுமேலாளர் எ.பி.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் ஒன்றியம் ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஒன்றியங்களிலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு 17-122018 முதல் செயல்பட்டு வருகிறது. தற்பொழுது நாளொன்றிற்கு சராசரியாக 2,05,000 லிட்டர் பால் 431 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு 34,000 லிட்டர் பால் பாக்கெட்டாக உள்ளூர் விற்பனையாக திருப்பூர் மாவட்ட பால் நுகர்வோர்களுக்கு விற்பனை மேற்கொள்ளப்பட்டு மீதமுள்ள பால் கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் சென்னை இணையத்திற்கும் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனையினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 13 ஒன்றியங்களிலும் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் வாசிக்க: TNPSC UPSC Current Affairs 1: போட்டித் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ!
திருப்பூர் ஒன்றியத்தின் மூலம் பால் உபபொருட்களான நெய், பால்கோவா, பாதாம் பவுடர், வெண்ணெய், ஐஸ்கீரீம் வகைகள், பன்னீர், டெட்ரா மில்க், டிலைட் பால் மற்றும் குலோப் ஜாம் மிக்ஸ் போன்ற பொருள்கள் விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வீரபாண்டி பிரிவிலுள்ள ஆவின் தலைமை அலுவலக மேலாளர்களை அணுகி முகவர் விண்ணப்பம் பெற்று முகவராக நியமனம் பெற்று பயனடையுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், சரண்யா மேலாளர்(விற்பனை) 9080294484. டாக்டர் சுரேஷ் மேலாளர் (விற்பனை) 9865254885 என்ற எண்ணில் அலுவலரை தொடர்பு கொள்ளவும் என ஆவின் பொதுமேலாளர் எ.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்க: 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: திருச்சியில் அரசு வேலை இருக்கு - இன்றே விண்ணப்பியுங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.