சீனியர் ஆராய்ச்சியாளர், திட்ட உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 3
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் “Development of top dressing automation technology for sustainable shrimp aquaculture" என்று ஆய்வுத் திட்டத்த்திற்கு இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
சீனியர் ஆராய்ச்சியாளர் (Senior Reseach Fellow) :1
விலங்கியல்/மீன் துறையில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய துறைகளில் குறைந்தது இரண்டு ஆண்டுகள்பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஆராய்ச்சி உதவித்தொகை: 35,000 ரூபாய் மற்றும் 16% வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) அளிக்கப்படும் .
திட்ட உதவியாளர் (Project Fellows): 1
உயிரித்தகவலியல் (bioinformatics) துறையில் அல்லது அதற்கு சமமான படிப்பில் முதுகலை அறிவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மாதம் ரூ.14,000 உதவித் தொகையாக அளிக்கப்படும்.
கள உதவியாளர்( Field Assistant): 1
ஏதேனும் அறிவியல் பிரிவில் பிஎஸ்சி முடித்திருக்க வேண்டும்.
மாதமாதம் ரூ.9400 உதவித் தொகையாக அளிக்கப்படும்.
நிபந்தனைகள்: நியமனம் முற்றிலும் தற்காலிகமானது. 6 மாத ஒப்பந்த காலத்திற்குப் பிறகு தேவை அடிப்படையில் நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை www.bdu.ac.in என்ற இணையதாத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் கூடிய சுய விவரக் குறிப்பை pchellapandi@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அனைத்து பணியிடங்களுக்கும் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் தாங்கள் சுயவிவரக் குறிப்பில் உள்ள விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (கல்வித் தகுதி சான்றிதழ் ) சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 04-05-2022
மேலும், விபரங்களுக்கு இந்த
இணைப்பைக் கிளிக் செய்யவும்.
இதையும் வாசிக்க:
ONGC: ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு: உதவித்தொகையுடன் 3,614 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!
பாங் ஆப் இந்தியாவில் 696 காலிப்பணியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.