2023 -24ம் ஆண்டுக்கான அக்னிவீரர் தேர்வுக்கான அறிவிப்பை திருச்சிராப்பள்ளி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இருந்து திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
பணி | வயது | கல்வித் தகுதி |
அக்னிவீர் ஜெனரல் | 17.5 முதல் 21 வயது வரை | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% மதிப்பெண்களுடன் மொத்தமாக குறைந்தது 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் |
அக்னீவீர் தொழில்நுட்பம் (agniveer Technical) | 17.5 முதல் 21 வயது வரை | 10 +2 வகுப்புத் தேர்ச்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் & ஆங்கிலம் என ஒவ்வொரு பாடங்களிலும் குறைந்தது 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். |
அக்னிவீர் கிளர்க்/ஸ்டார் கீப்பர் தொழில்நுட்பம் | 17.5 முதல் 21 வயது வரை | கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் என ஏதேனும் ஒரு பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
அக்னீவீரர் டிரேட்ஸ்மேன் - 10ம் வகுப்பு தேர்ச்சி | 17.5 முதல் 21 வயது வரை | 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். |
அக்னீவீரர் டிரேட்ஸ்மேன் - 8ம் வகுப்பு தேர்ச்சி | 17.5 முதல் 21 வயது வரை | 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 33% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் |
மேற்படி, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதற் கட்டமாக ஆன்லைன் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் ஆட்சேர்ப்பு பேரணிக்கு (Recruitment Rally) அழைக்கப்படுவர்கள்.
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை பிப்ரவரி 16ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்த இணைப்பில் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, அபாயம் மற்றும் சிரமப்படிகளுடன் ஈர்க்கும் வகையிலான மாதாந்திர ஊதியம் வழங்கப்படும்.
4 ஆண்டு பணிக்காலம் முடிவடைந்ததும், அக்னி வீரர்களுக்கு சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு வழங்கப்படும். அதில் அவர்களது பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவை அடங்கும்.
முதலாம் ஆண்டில் மாதாந்திர ஊதியமாக ரூ,30,000 நிர்ணயிக்கப்படும். அக்னி வீரர் தொகுப்பு நிதிக்கு ரூ.9,000 அளிக்கப்படும். எஞ்சிய ரூ.21,000 கையில் கிடைக்கும்.
2-ம் ஆண்டில் ரூ.33,000, 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30% பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70% தொகை வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ.5.02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ.11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும்.
இந்த சேவா நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ.48 லட்சத்துக்கு வழங்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath