டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் தங்களின் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் ( OTR ) ஆதாரை இணைப்பதற்கு வரும் ஏப்ரல் 30-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசு பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகின்றது. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்கள் தங்கள் டிஎன்பிஎஸ்சி நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை ஜனவரி 28-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது.
இதையும் படிங்க -
TNPSC Group 2, 2A தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் மார்ச் 23-ம் தேதியுடன் முடிவடைவதால், அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் வரும் 23-ம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும்.
இதையும் படிங்க -
குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஏற்கனவே OTR கணக்குடன் ஆதாரை இணைத்த தேர்வர்கள் மீண்டும் இணைக்க தேவையில்லை என்பது குறிப்பிடதக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.