Home /News /employment /

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க 3 நாள் தான் இருக்கு

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் வேலை

tiic recruitment 2021 notification : தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக நிறுவனத்தில் தற்போது Marketing Executive பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 07.11.2021 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துக்களைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது.

    இந்த நிறுவனத்தில் தற்போது Marketing Executive பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 07.11.2021 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :

    வேலையின் பெயர் :  தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC ) Marketing Executive பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    விளம்பர எண் :  NOTIFICATION NO.2/TIIC/2021

    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை : பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    வயது விவரம் : குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 33 வயது வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

    தேர்வு செய்யப்படும் முறை : மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    கல்வித்தகுதி : விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    சம்பள விவரம் : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி :  24.10.2021 தேதியில் இருந்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2021 க்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்க்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்ப முறை : ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்ப கட்டணம் : No fees விண்ணப்பக்கட்டணம் செலுத்தத் தேவை இல்லை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    http://www.tiic.co.in/mktg_recruitment/Dashboard.aspx

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி