Home /News /employment /

ஏற்றுமதி இறக்குமதியளர்களுக்கு 3 நாள் இணைய வழி பயிற்சி: தமிழக அரசு

ஏற்றுமதி இறக்குமதியளர்களுக்கு 3 நாள் இணைய வழி பயிற்சி: தமிழக அரசு

தமிழக அரசு

தமிழக அரசு

தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    4jkஏற்றுமதி இறக்குமதியளர்கள் பயன்படும் வகையில் மூன்று நாள் இணையவழி பயிற்சியினை தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (Entrepreneurship Development and Innovation Institute) அறிவித்துளளது.

    இடம் : சென்னை 

    பயிற்சி காலம்:  24.08.2022 நேதி முதல் 26.08.2022-ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை)

    இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,"  உலகமயமாக்கலின் விளைவாக, ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில்,  ஏற்றுமதி கொள்முதலுக்ககான வாய்ப்புக்கள், சந்தையின் தேவை, ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்திய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள். போன்றவை பயிற்றுவிக்கப்படும்

    மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவிகள் பற்றியும், அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படும். அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.

    ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.

    பயிற்சிக் கட்டணம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

    இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வவைதளத்தில்  தெரிந்து கொள்ளலாம்.

    அலுவலக முகவரி; தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை,பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032

    தொலைபேசி எண்கள்: 8668102600,9444557654,
    044-22252081/22252082 ஆகும். www.editn.in மின்னஞ்சல் ஆகும்.

    இதையும் வாசிக்க: ஐபிபிஎஸ் எழுத்தர் பதவி: முதல்நிலைத் தேர்வு அட்மிட் கார்டு வெளியானது

    மேலும் விவரங்களுக்கு, அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வலைகாவை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) மேற்கண்ட முகவர் மற்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Export

    அடுத்த செய்தி