Home /News /employment /

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: அரசு மருத்துவமனையில் வேலை

தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: அரசு மருத்துவமனையில் வேலை

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

விண்ணப்பம்,கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India
    தூத்துக்குடி அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமையில்  காலியாக உள்ள 5 சமையலர் (Cook) மற்றும் 6 சலவையாளர் (Dhoby) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    ஊதிய விகிதம்:   நிலை I (ரூ 15700 - 58100)

    கல்வித் தகுதி:  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு: 01.04.2022 அன்று பட்டியல் இனங்கள்/பட்டியல் பழங்குடியினர்  வயது 18-37 ஆக இருக்க வேண்டும்; பிற்படுத்தப்பட்டோர்/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வயது - 18-34 ஆகவும், பொதுப் பிரிவினர் 18-32 ஆகவும், மாற்றுத் திறனாளிகள் 42க்கு கீழும் இருக்க வேண்டும்.

    முன்னுரிமை அடிப்படையிலான பணியிடங்களுக்கான (அரசாணை) நிலை  எண்.122 மனிதவள மேலாண்மைத் (கே.2)  துறை, நாள். 02.11.2021)ல் அறிவுறுத்தியபடி இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.

    விண்ணப்பபங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

    முதல்வர்,
    அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
    தூத்துக்குடி

    விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 30.09.2022 மாலை 5 மணி வரை

    (விண்ணப்பம்,கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) முன்னுரிமை பெற்றவர்கள் உரிய சான்றிதழ் இணைக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க:  SBI Notification: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரோபேஷனரி ஆபீசர் பதவி.. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு

    நிர்ணயிக்கப்பட்ட 30.09.2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பபங்கள்  ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Recruitment

    அடுத்த செய்தி