திருவாரூர் மத்திய பல்கலை.யில் வேலை வாய்ப்பு...!

திருவாரூர் மத்திய பல்கலை.யில் வேலை வாய்ப்பு...!
வேலை
  • News18
  • Last Updated: December 5, 2019, 5:46 PM IST
  • Share this:
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது பல்கலைகழகத்தில் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 பேராசிரியர்களும் 15 இணை பேராசிரியர்களும் 4 உதவி பேராசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் ஒரு உதவிப் பதிவாளர் பணியிடமும் ஒரு ஹிந்தி அலுவலர் பணியிடமும் நிரப்பப்பட உள்ளது.


இது தொடர்பாக மேலதிக விபரங்களை பெறவும் விண்ணப்பங்களை பெறவும் மத்திய பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.cutn.ac.in என்கிற முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

வருகின்ற டிசம்பர் 20-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய பல்கலைக்கழகத்தின் பதிவாளர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

First published: December 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்