விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு / பணியிடத்திற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
தியாகராஜர் கல்லூரி மதுரை நகரின் பழமையான கல்லூரிகளில் ஒன்று. இங்கு காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் , ஆய்வு கூட உதவியாளர் , பதிவறை எழுத்தர் , அலுவலக உதவியாளர் , குடிநீர் கொணர்பவர் , துப்புரவாளர் , தோட்டக்காரர் , குறியீட்டாளர் , பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
Thiyagarajar College
வேலையின் பெயர்
Office Assistant, Typist, Security, Lab Assistant & Various
காலிப்பணி இடங்கள்
32
தேர்ந்தெடுக்கும் முறை
நேர்காணல்
வயது
அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சம்பள விவரம்
தமிழக அரசு விதிகளின் படி
இதற்கான விண்ணப்ப படிவத்தினை இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் இணைப்புகளுடன் கல்லூரி அலுவலகத்திற்கு செயலர், தியாகராசர் கல்லூரி, 139-140 , காமராசர் சாலை, தெப்பக்குளம் , மதுரை - 9 என்ற முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்படிவத்திலும், முத்திரையிடப்பட்ட உரையிலும் விண்ணப்பிக்க கூடிய பதவி மற்றும் பணியிடத்தை தெளிவாக குறிக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு / பணியிடத்திற்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
அறிவிப்பு விவரம்
இணைப்புகள் :
கல்வித் தகுதி மற்றும் அனுபவ சான்றிதழின் நகல்கள்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மற்றும் புதுப்பிக்கப்பட்டு இருந்தால் அதற்கான நகல்
சாதிச்சான்றிதழ் நகல்
ஆதரவற்ற விதவை எனில் வருவாய் கோட்ட அலுவலர் /உதவி கலெக்டர் / சப்கலெக்டர் வழங்கிய சான்றிதழின் நகல்
தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் நகல் (தேவை ஏற்படின் )
சுயமுகவரியுடன் முத்திரைவில்லை ஒட்டப்பட்ட உறை
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.