இந்த ஐ.டி., வேலைவாய்ப்பிற்கு 15 முதல் 32 லட்சம் வரை சம்பளம் வாங்கலாம்!

மேலே கூறிய அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் பெங்களூரு, டெல்லி, புனே, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் தான் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இந்த ஐ.டி., வேலைவாய்ப்பிற்கு 15 முதல் 32 லட்சம் வரை சம்பளம் வாங்கலாம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: December 21, 2018, 8:20 PM IST
  • Share this:
ஐ.டி., துறையில் வேலை செய்பவர்களுக்குத் தற்போது அட்டோமேஷன், பிக் டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

இணையதளத் திறன் பயிற்சி மேப்பாட்டு நிறுவனமான சிம்பிள்லேர்ன் ஐ.டி., துறையில் தற்போது அதிகம் சம்பளம் அளிக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கைக்காக 1000+ நபர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஐ.டி., துறையில் அதிகத் தேவை உள்ள தொழில்நுட்பங்கள் எவை. எவ்வளவு சம்பளம் என்று இங்குப் பார்ப்போம்.


டேட்டா சைண்ட்டிஸ்ட்
மென்பொருள் உற்பத்திக்குத் தேவையான தரவுகளை அதற்கு ஏற்றவாறு அறிந்து, புரிந்து, ஆய்வு செய்து அளிப்பதே டேட்டா சைண்ட்டிஸ்ட்டின் முக்கியப் பணி.2018-ம் ஆண்டு இந்தப் பிரிவில் மட்டும் 20,092 வேலை வாய்ப்புகளை இந்திய ஐடி நிறுவனங்கள் அளித்துள்ளன. இந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அளித்த அதிகபட்ச சம்பளம் ஆண்டுக்கு 25,00,000* ரூபாய்.

டேட்டா சைண்ட்டிஸ்ட் திறன் படைத்த ஊழியர்களை டிசிஎஸ், ஃபிளிப்கார்ட், ஹேவ்லெட்-பேக்கர்ட், விப்ரோ டெக்னாலஜிஸ் மற்றும் சாம்சங் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் அளித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள்
செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள் ரோபாக்கள், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் போன்றவற்றை உருவாக்கக் கூடிய திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.

2018-ம் ஆண்டு 8,000 நபர்களுக்கு இந்தப் பிரிவின் கீழ் இண்டெல், அமேசான் இந்தியா, அக்செஞ்சர், விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களில் பணி வாய்ப்பு கிடைத்துள்ளது. மென்பொருள் உருவாக்கும் திறனுடன் சிறந்த கணிதம், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போன்ற அறிவு இருந்தால் ஆண்டுக்கு 20,00,0000 ரூபாய் வரை சம்பளம் பெற முடியும்.

கிளவுட் ஆர்க்கிடெக்ட்
கிளவுட் ஆர்க்கிடெக்ட்கள் ஒரு நிறுவனத்தை எப்படி ஒரு இடத்தில் இருந்துகொண்டு இயக்குவது என்பதற்கு ஏற்ற மென்பொருள்களை உருவாக்கும் திறன் படைத்து இருக்க வேண்டும்.

மைரோசாப்ட் இந்தியாம் விப்ரோ, எச்சிஎல். ஐபிஎம் இந்தியா மற்றும் டெக் மஹிந்தரா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பணிக்கு 18 முதல் 30 லட்சம் ரூபாய் வரை ஆண்டுச் சம்பளமாக அளித்துள்ளன.

2018-ம் ஆண்டு 14,072 நபர்கள் கிளவுட் ஆர்க்கிடெக்ட் பணிகளைப் பெற்றுள்ளனர்.

சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்ஸ்
ஒரு நிறுவனத்தின் கணினிகளைப் பாதுகாப்பாக நிர்வகிப்பது. ஹேக்கிங் திறன் படைத்தவர்களுக்கு இந்தப் பிரிவில் வேலை எளிதாகக் கிடைக்கும்.

2018-ம் ஆண்டு 36,000 நபர்கள் இந்தப் பிரிவில் பணிக்குச் சேர்ந்துள்ளனர். ஐபிஎம் இந்தியா, இன்போசிஸ், டெல் இந்தியா, ஹெச்பி இந்தியா, அமேசான் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தத் திறன் உள்ளவர்களை அதிகளவில் பணிக்கு எடுத்துள்ளனர். அதிகபட்சமாக 22 லட்சம் முதல் 32 லட்சம் ரூபாய் வரை ஆண்டுச் சம்பளம் பெற வாய்ப்புகள் உள்ளது.

டிஜிட்டல் பிராஜக்ட் மேனேஜர்
இணையதளம் உருவாக்குதல், மொபைல் செயலிகள், திட்டமிடுதல், நிர்வகித்தல் போன்ற பணிகள் டிஜிட்டல் பிராஜக்ட் மேனேஜர் கீழ் இயங்கும்.

2018-ம் ஆண்டு 18,000 நபர்கள் இந்தப் பணியில் சேர்ந்துள்ளனர். 15 முதல் 24 லட்சம் வரை சம்பளம் பெற்றுள்ளனர். சமுக வலைத்தளம், SEO மற்றும் அனலிட்டிக்ஸ் குறித்துத் தெளிவான புரிதல் வேண்டும்.

டெக் மஹிந்தரா, அக்சஞ்சர் இந்தியா, விப்ரோ, பிலிப்ஸ் இந்தியா, டாடா கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் இந்தப் பணிக்கு அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்தத் தொழில்நுட்பங்களில் அதிக வேலை வாய்ப்பு அளித்த நகரங்கள்

மேலே கூறிய அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் பெங்களூரு, டெல்லி, புனே, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் தான் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

மேலும் பார்க்க: பிரதமர் வேட்பாளராக களமிறங்க விரும்பவில்லை: நிதின் கட்கரி
First published: December 21, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading