Home /News /employment /

தேனி மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

தேனி மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேனி மாவட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

    2015ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதி குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக்குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூக நல உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

    குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது
    குழந்தை உளவியல், மனநலம் மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

    மேலும் , விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும் , 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுமத்தில் அதிகபட்சமாக ஒரு நபர்
    இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது.

    இதற்கான விண்ணப்படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் வருகின்ற (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) 22-12-2021 அன்று மாலை 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
    ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - 2
    மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி -625 531.
    தொடர்பு எண்கள் : 04546 -291919 , 89031 84098.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - 2, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04546 291919 89031 84098 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://theni.nic.in/ta/notice_category/ஆட்சேர்ப்பு/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி