• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • கிராம உதவியாளர் வேலை... ரூ. 35,100 சம்பளம் - 5ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிராம உதவியாளர் வேலை... ரூ. 35,100 சம்பளம் - 5ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வேலை

தமிழக அரசு வேலை

28..10.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ‘கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

  • Share this:
    2020-2021 மற்றும் 2021-2022-ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் காலியாக உள்ள 07 (ஏழு)
    பணியிடங்களில் இனச்சுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 28.10.2021 அன்று வரை மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் :























































    அறிவிக்கை எண். 01/2021
    விளம்பர எண் APT- 01
    பதவியின் பெயர் கிராம உதவியாளர் (Village Assistant )
    காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 07
    பணியிடம் தேனி மாவட்டம்
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத் தேர்வு (Written Test
    Interview )
    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் தகுதியான விண்ணப்ப தாரர்களுக்கு
    பின்னர் அஞ்சல் மூலம்
    அறிவிக்கப்படும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.10.2021.
    விண்ணப்பிக்க கடைசி தேதி  28.10.2021.
    கல்வி தகுதி 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் ரூ.11,100 – ரூ.35,100
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள உடற்த் குதியினைப் பெற்றிருக்க வேண்டும்.







    உடற்தகுதி சான்றிதழ் படிவம்
    தமிழ்நாடு கிராம உதவியாளர்கள்
    சிறப்பு விதியின்கீழ்
    நிர்ணயிக்கப்பட்டுள்ள பார்வையின் தரம்
    பார்வை தரம் - III
    அல்லது
    அதற்கு; மேம்பட்ட தரம்

    நியமனத்திற்கு முன் இருப்பிடம்

    • இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

    • நிரந்தர முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் , அடையாள அட்டை , ஆதார் அட்டை, குடும்ப அட்டை , ஓட்டுநர் உரிமம் , ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரரின் நிரந்தர முகவரி தொடர்பாக எழும் தெளிவின்மைகள் குறித்து பணி நியமன அலுவலரின் முடிவே
      இறுதியானது.


    விண்ணப்பிக்க கடைசி நாள்

    • விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும்.

    • 28..10.2021 அன்று மாலை 05.45 மணிக்குள் இவ்வலுவலகத்திற்கு
      வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    • விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது ‘கிராம உதவியாளர் பணிக்கான
      நேரடித் தேர்வு - ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

    • விண்ணப்பங்கள்யாவும் 28.10.2021 தேதிக்கு முன்பாக வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபடடி
      என்ற முகவரிக்கு அஞசல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.

    • காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


    ஏனைய முக்கிய அறிவுரைகள்

    • விண்ணப்பதாரர்கள் தேர்விற்கான தங்களுடைய தகுதிகளை உறுதி செய்தல் தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் அத்தேர்விற்கான அனைத்து தகுதிகளையும் பெறறுள்ளனரா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    • விண்ணப்பங்கள் வரையறுகக்ப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு தபால் மூலமாகவோ நேரிலோ அனுப்பலாம். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    • சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு புகைப்படத்தின் மேல் பகுதியில் சுய சான்றொப்பத்துடன் விண்ணப்பங்கள்
      அனுப்பப்பட வேண்டும்.

    • அனைத்து சான்றாவணங்களின் நகல்கள் மட்டுமே உரிய முறையில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல்
      சான்றாவணங்கள் இணைக்கக் கூடாது.

    • முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.


    தேர்வு செய்யும் நடைமுறை

    விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தேர்வு செய்யப்படும்.

    தடையின்மைச் சான்று அரசுப் பணியாளர்கள் தங்களது துறையிலிருந்து தடையின்மைச் சான்று பெற்று
    சான்றிதழ் சரிபார்ப்பின் போது சமர்ப்பிக்க வேண்டும்.

    தேர்வு மையங்கள்

    தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்விற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பின்னர் தனியே நேரில் வழங்கப்படும்.

    குறிப்பு :  விணணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கும் தங்களது சொந்த செலவில் வர வேண்டும்.
    தேர்வு மையங்களை மாற்றக் கோரும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    பொது விபரங்கள் :-

    • கிராம உதவியாளர் பதவிக்கு நியமன இட ஒதுக்கீட்டு விதி வட்ட வாரியாகப் பின்பற்றப்படும்.

    • வட்டவாரியான காலிப்பணியிட பகிர்வு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்னர் அறிவிக்கப்படும்.

    • அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். தேர்வு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு
      உட்பட்டதாகும்.

    • பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் கிடைக்கப்பெறாவிடில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அதே வகுப்பைச்
      சார்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

    • ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கான நியமன இட ஒதுக்கடு
      விதி இத்தெரிவிற்குப் பொருந்தும்.

    • மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் 40 முதல் 50-க்குள் உடையவராக இருக்க வேண்டும். பார்வையற்ற மற்றும் காதுகேளாத நபர்கள் இத் தேர்விற்கு தகுதியறற்வர்களாவர்


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2021/10/2021101391.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: