தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 80 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.30

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. முன்னாள் படை வீரர்கள் 53 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

news18
Updated: November 28, 2018, 4:08 PM IST
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் 80 பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.30
தேனி மாவட்ட நீதிமன்றம்
news18
Updated: November 28, 2018, 4:08 PM IST
தேனி மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பிரிவுகளில் 80 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 30.

காலியிடங்களின் விவரம்: டிரைவர் பிரிவில் 4, சீனியர் பெய்லி பிரிவில் 4, எக்சாமினர் பிரிவில் 5, ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர் பிரிவில் 10, ஆஃபிஸ் அசிஸ்டென்ட் பிரிவில் 26, நைட் வாட்ச்மேன் பிரிவில் 11, மசால்சி (உதவியாளர்) பிரிவில் 7, ஸ்வீப்பர் பிரிவில் 4, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் பிரிவில் 7, சானிடரி ஒர்க்கர் பிரிவில் 2 என மொத்தம் 80 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: டிரைவர் பணிக்கு 8-ம் வகுப்பு படிப்பு, சீனியர் பெய்லி, எக்சாமினர், ஜெராக்ஸ் மெசின் ஆபரேட்டர் பணிகளுக்கு  8-ம் வகுப்பு படிப்பு, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்கு பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு, இதர பணிகளுக்கு எழுதப் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு: ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. முன்னாள் படை வீரர்கள் 53 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் தேனி மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 30.

Loading...

மேலும், விவரங்களுக்கு https://districts.ecourts.gov.in/theni மற்றும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Advertisement%20for%20Recruitment%20to%20Fill%20up%20the%20Vacancies%20in%20Various%20Post%20in%20Theni%20Judicial%20Unit.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch

First published: November 28, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...