தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையில் காலியாக உள்ள 16 குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு வரும் ஜூன் 19ஆம் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்திருக்கிறது. இந்தப் போட்டித் தேர்வில் பங்கேற்க கடந்த ஒன்றாம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிக்கு சமூகவியல், சமூகப் பணி, உளவியல், குழந்தை பாதுகாப்பு, குற்ற ஆய்வியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் தான் பங்கேற்க இயலும் என்றும், இரு தாள்களாக நடத்தப்படவிருக்கும் இந்தத் தேர்வுகளின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வின் முதல் தாளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
Also Read : 626 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாட்டுக்கு முற்றிலும் எதிரானதாகும். மத்திய அரசால் நடத்தப்படும் அனைத்துப் போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகள் தமிழ் மொழியில் மட்டும் தான் நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான தேர்வுக்காக ஜூன் 16-ம் தேதி நடைபெறும் முதல் தாளின் சமூகவியல், சமூகப்பணி, உளவியல், குழந்தை வளர்ச்சி மற்றும் குற்றவியல் விருப்ப பாடங்களின் வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.