TET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

மாதிரிப் படம்

தமிழகத்தில் 2013 ,2017 மற்றும் 2019ஆகிய 3 ஆண்டுகள் மட்டுமே தேர்வினை தமிழக அரசு நடத்தியது. இதில் 90 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர்

  • Share this:
    ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கால அவகாசத்தை 7ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் முழுவதும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் ஈடுபடுபவர்களின் தகுதியை நிர்ணயிக்க டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் டெட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.

    டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதுக்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் .  இந்த காலக்கெடுவுக்குள் பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள் மீண்டும் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்.இந்நிலையில் டெட் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வாழ்நாள் முழுவதற்கும் செல்லுபடியாகும் வகையில் மத்திய அரசு நீடிக்க வேண்டுமென நாடு முழுவதும் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனை பரிசீலித்த மத்திய அரசு டெட் தேர்வுக்கான 7 ஆண்டு கால அவகாசம் என்பதை வாழ்நாள் முழுவதற்கும் நீட்டித்து தற்போது உத்தரவிட்டுள்ளது மேலும் அந்தந்த மாநிலங்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளவர்களுக்கான சான்றிதழை புதுப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    தமிழகத்தைப் பொருத்தவரை 2012ம் ஆண்டு டெட் தேர்வை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் 2013 ,2017 மற்றும் 2019ஆகிய 3 ஆண்டுகள் மட்டுமே தேர்வினை தமிழக அரசு நடத்தியது. இதில் 90 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர்.  இவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பள்ளி திறக்கப்படும் நேரத்தில் பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது 7 ஆண்டு கால அவகாசம் வாழ்நாள் முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டு என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: