ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு

ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு
தேர்வு முடித்து வரும் மாணவிகள்
  • Share this:
தமிழகம் முழுவதும் இரண்டாம் தாள் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று நடைபெற்றது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு 'டெட்' என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 'டெட்' தேர்வுக்காக முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.

நேற்று நடைபெற்ற முதல் தாள் தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேர் எழுதினர். இதையடுத்து ஆசிரியர் இரண்டாம் தாள் தகுதித்தேர்வு இன்று நடைபெற்றது. இரண்டாம் தாள் தேர்வுக்கு சுமார் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். சென்னையில் 20 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 481 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.


தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க 2000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மேற்பார்வை பணியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். செல்போன் உட்பட மின்னணு பொருட்களை தேர்வறைக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
First published: June 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்