மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற CTET தேர்வு & TET தகுதி தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு

மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற CTET தேர்வு & TET தகுதி தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு
  • Share this:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் TET மற்றும் மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற தகுதித் தேர்வான CTET தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு TET  தேர்வு ஜூன் மாதம் 27,28ந் தேதி நடைபெற உள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மார்ச் 2 மற்றும் 3 ந் தேதி நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட்டார கல்வி அலுவலர் தேர்வு பிப்ரவரி 15மற்றும் 16 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரயிம் அறிவித்துள்ளது.  முதுகலை ஆசிரியர் தேர்வு, இடைநிலை ஆசிரியர் பணியிடம், தொடக்க பள்ளி ஆசிரியர் பணி ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோன்று கேந்திரிய வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்ற, ஆசிரியர் தகுதித் தேர்வான CTET வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியமான  சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. CTET தேர்வு 20 மொழிகளில் 112 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இந்த மாதம் 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
First published: January 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்