ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

உத்தேச விடைகளை வெளியிட்ட ரயில்வே வாரியம்: 27ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம்

உத்தேச விடைகளை வெளியிட்ட ரயில்வே வாரியம்: 27ம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம்

காட்சிப் படம்

காட்சிப் படம்

நிலை 2,3,5 பதவியிடங்கள் தேர்வுகளுக்கான உத்தேச விடைகளை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பிரபலமான பிரிவுகளில் (CEN 01/2019 (NTPC categories)  நிலை 5,3,2   நிலை எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை இந்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுளளது.

  இந்திய ரயில்வே துறையின் பல பிரிவுகளில் 1.4 லட்சம் காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை முன்னதாக ரயில்வே வாரியம் வெளியிட்டது. CEN 03/2019 (Ministerial & Isolated Categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு முதற்கட்டமாகவும், CEN 01/2019 (NTPC categories) ஆட்சேர்ப்புக்கான தேர்வு இரண்டாவது கட்டமாகவும், CEN No. RRC- 01/2019 ஆட்சேர்ப்புக்கான தேர்வு மூன்றாவது கட்டமாகவும் நடைபெற்றது.

  முன்னதாக, நாடு முழுவதும் CEN 01/2019-ல் நிலை 5,3,2  இரண்டாவது கட்ட  எழுத்துத் தேர்வு நடைபெற்றது. சென்னையில் 5ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 15ம் தேதியும், 2ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 16ம் தேதியும், 3ம் நிலை பதவிகளுக்கு ஜூன் 17ம் தேதியும் தேர்வுகள் நடைபெற்றன.

  இதையும் வாசிக்க:  10, 12-ம் வகுப்பு தனித் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியீடு 

  இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான உத்தேச விடைகளை ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.உத்தேச விடைகளில் ஏதேனும் தவறு உள்ளது என்று கருதினால், விண்ணப்பதாரர் மேல்முறையீடு செய்யலாம். 27ம் தேதி இரவு 11:55 மணிக்குள் முறையீடு செய்யலாம். இதற்கான, விண்ணப்பிக் கட்டணம் ரூ.50 ஆகும். ஒருவேளை,     மேல்முறையீடு தொடர்பான கோரிக்கைகள்  சரியாக இருந்தால், மேல்முறையீடு கட்டணம் விண்ணப்பதாரருக்கு திருப்பி அனுப்பப்படும்.

  உத்தேச விடைகளை மேல்முறையீடு செய்ய இந்த  இணைப்பைக் கிளிக் செய்யவும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Indian Railways