ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசு கல்லூரியில் வேலை... மாதம் ரூ.70,000 சம்பளம்.... உடனே விண்ணப்பியுங்கள்!

மத்திய அரசு கல்லூரியில் வேலை... மாதம் ரூ.70,000 சம்பளம்.... உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல், மற்றும் உற்பத்தி கல்வி நிறுவனம்

இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல், மற்றும் உற்பத்தி கல்வி நிறுவனம்

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி டிசைன் & மேனுபேக்ச்சரிங் கல்லூரியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ilதமிழ் நாடு காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல், மற்றும் உற்பத்தி கல்வி நிறுவனத்தில் ( Indian institute of information technology, design and manufacture ) தற்காலிக பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணிக்கான முழு விவரங்கள் கீழ் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  பணியின் விவரங்கள்: 

  பணியின் பெயர்: Temporary Facultyநிறுவனம் : IIITDM Kancheepuramகாலியிடங்கள் : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  Temporary Faculty பணிக்கான கல்வித் தகுதி:

  IIITDM காஞ்சிபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல்/IT/AI/DS ஆகியவற்றில் BE/ B.Tech/ M.Tech முடித்திருக்க வேண்டும்.

  மேலும் எதிர்பார்க்கும் தகுதிகள்:

  சம்பள விவரம்:

  Ph.D. முடித்திருந்தால் ரூ.70,000

  Ph.D  இல்லாதவர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ. 65,000/-(P.G படிப்பின் அடிப்படையில் வழங்கப்படும்)

  தேர்வு செயல்முறை:

  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 02.11.2022 அன்று நடைபெற உள்ளது.

  நேர்காணல் விவரங்கள்:

  இந்த பணிக்காகத் தகுதியானவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம். நேர்காணலுக்குச் செல்லும் போது சுய விவரம் பட்டியல், அனைத்து அசல் சாற்றுதல்கள் மற்றும் புகைப்படத்துடன்  செல்ல வேண்டும்.

  விண்ணப்பதாரர்கள் 02.11.2022 அன்று காலை 8.30 மணிக்கு  நேர்காணலுக்குச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : டிகிரி படித்தவரா? மாதம் ரூ.30,000 சம்பளத்தில் வேலை.. இன்றே கடைசி நாள்

  நேர்காணல் நடைபெறும் இடம்:

  Administration Section Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600127.  Email :recruit@iiitdm.ac.in

  மேலும் விவரங்களுக்கு : http://www.iiitdm.ac.in/

  Published by:Janvi
  First published:

  Tags: Job, Job vacancies, Tamil Nadu Government Jobs