பி.இ பட்டதாரிகளுக்கு தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேர்வில் வெற்றிபெற்றவர்கள் மாதம் 35,400 முதல் 1,12,400 ரூபாய் வரை மாதம் சம்பளம் வாங்கலாம்.

news18
Updated: March 28, 2019, 11:50 AM IST
பி.இ பட்டதாரிகளுக்கு தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு!
அரசு வேலைவாய்ப்பு!
news18
Updated: March 28, 2019, 11:50 AM IST
பொதுத்துறை நிறுவனமான தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தில் மொத்தம் 127 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 52 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 75 இடங்களும் உள்ளன.

இந்த வேலைவாய்ப்பைப் பெற பொறியியல் துறையில் எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி போன்ற ஏதேனும் ஒரு பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


2019 ஏப்ரல் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழித் தேர்வு முறையில் ஆட்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.

கணினி தேர்வில் வெற்றிபெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 35,400 முதல் 1,12,400 ரூபாய் வரை மாதம் சம்பளம் வாங்கலாம்.

விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களைப் பெற https://ntrorectt.in/ntro/home என்ற இணையதளத்திற்குச் செல்க.

Loading...
வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

மேலும் பார்க்க:
First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...