• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • லட்சங்களில் ஊதியம்... வெங்காய பண்ணையில் வேலை - போட்டிபோட்டு விண்ணப்பிக்கும் கேரள எம்.பி.ஏ , டெக் பட்டதாரிகள்!

லட்சங்களில் ஊதியம்... வெங்காய பண்ணையில் வேலை - போட்டிபோட்டு விண்ணப்பிக்கும் கேரள எம்.பி.ஏ , டெக் பட்டதாரிகள்!

தென்கொரிய வெங்காய பண்ணையில் வேலை

தென்கொரிய வெங்காய பண்ணையில் வேலை

தென்கொரிய அரசு சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் வெங்காய பண்ணைக்கு முதற்கட்டமாக 100 பேர் தேர்வு செய்யப்பட்டுகின்றனர்.

  • Share this:
தென் கொரியாவில் வெங்காய பண்ணையில் இருக்கும் வேலைக்கு எம்.பி.ஏ மற்றும் டெக் பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்து பரிதவித்து வருகின்றனர். பட்டதாரிகளாகவும், தொழில்நுட்ப வல்லுநராக இருந்தாலும் சரியான வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால் கிடைக்கும் வேலைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில் கேரள அரசு சார்பில் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள், தென்கொரியாவில் உள்ள வெங்காய பண்ணையில் பணியாற்றுவதற்கு ஆர்வமுடம் விண்ணப்பித்துள்ளனர்.

வெளிநாட்டு வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு (ODEPC) மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அதில், நேரில் பதிவு செய்பவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் தென்கொரியாவில் வெங்காயப் பண்ணையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனையறிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், கொச்சியில் இருக்கும் ODEPC அலுவலகம் முன்பு குவிந்தனர். எம்.பி.ஏ, டெக் பட்டதாரிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தென் கொரியாவில் இருக்கும் வெங்காய பண்ணைக்கான வேலைக்கு விண்ணப்பித்தனர்.

தென்கொரிய அரசு சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் வெங்காய பண்ணைக்கு முதற்கட்டமாக 100 பேர் தேர்வு செய்யப்பட்டுகின்றனர். எதிர்காலத்தில் ஆயிரம் பேர் வரை தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 காலிப் பணியிடங்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விணப்பித்துள்ளனர். ஆனால், அதிலிருந்து சுமார் 800 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். தேர்வு செய்யப்படுபவர்கள், தென்கொரியாவில் இருக்கும் தெற்குப் பகுதியில் சினான் மற்றும் முவான் தீவுகளில் உள்ள வெங்காய பண்ணையில் பணியாற்ற உள்ளனர்.

அவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,12,500 பெறுவார்கள். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் 28 நாட்கள் வேலை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தினமும் 9 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்த கிரண் என்பவர் எம்.பி.ஏ பட்டதாரி. 32 வயதாகும் அவர் பேசும்போது, கொரோனா வைரஸால் தகுந்த வேலை இல்லாமல் தவித்து வருகிறேன். விவசாய வேலையில் முன் அனுபவம் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் நல்ல சம்பளத்துடன் ஊதியம் கிடைத்தால், உழைக்கத் தயாராக இருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

Also read... 1,226 கிலோ பூசணிக்காயை விளைவித்து கின்னஸ் சாதனை செய்த விவசாயி!

ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், அந்த வெப்சைட் செயலிழந்துவிட்டது. அந்தளவுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர் என அவர் கூறினார். இதுகுறித்து பேசிய ODEPC அதிகாரி, இந்த வேலைக்கு மூன்று வகையான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாயத்தை உண்மையாக விரும்பும் குழுவினர் ஒரு தரப்பினர், இரண்டாவது தரப்பினர் தென்கொரியாவில் கிடைக்கும் எந்த வேலையையும் செய்யத் தயாராக உள்ளனர், முன்றாவது தரப்பினர், எங்கு எந்த வேலை கிடைத்தாலும் செய்ய தயாராக இருப்பவர்கள் என மூன்று வகையினர் இருப்பதாக கூறிய அவர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், 10 நாட்களில் தேர்வு நடைமுறைகள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: