• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • பிரெஷ்ஷர்களுக்கு வாய்ப்பளிக்கும் டெக் மகேந்திரா - விண்ணப்பிப்பது எப்படி ?

பிரெஷ்ஷர்களுக்கு வாய்ப்பளிக்கும் டெக் மகேந்திரா - விண்ணப்பிப்பது எப்படி ?

டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா

டெக் மகேந்திரா கடந்த காலாண்டில் 5,200 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது. இதே போல மீதமுள்ள இந்த நிதியாண்டில் இந்த பணியமர்த்தலானது தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.

  • Share this:
    டெக் மகேந்திரா 30% க்கும் அதிகமான பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து டெக் மகேந்திராவின் நிர்வாக அதிகாரி மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான சிபி குர்னானி (C P Gurnani ) தெரிவிக்கையில், 30% க்கும் அதிகமான பிரெஷ்ஷர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், டெக் மகேந்திரா கடந்த காலாண்டில் 5,200 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது.

    இதன் மூலம் அதன் மொத்த எண்ணிக்கையானது 1.26 லட்சத்திற்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இதே போல மீதமுள்ள இந்த நிதியாண்டில் இந்த பணியமர்த்தலானது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் செயற்கை நுண்ணறிவு, ஸ்பேஷ் டெக்னாலஜி, இணையம் சம்பந்தமான திறன் வாய்ந்த ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் , நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 39.2% அதிகரித்து, 1,353 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

    அதன் நிலையான நாணய வருவாய் வளர்ச்சி விகிதமானது 3.9% ஆக அதிகரித்துள்ளது. இது வெறும் 2.3% இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போல வருவாய் விகிதமானது இந்த காலாண்டில் 7% அதிகரித்து, 10,485 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

    டெக் மகேந்திரா பிரெஷ்ஷர் பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    https://careers.techmahindra.com/

    டெக் மகேந்திரா பிரெஷ்ஷர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி :

    விண்ணப்பிக்க குறைந்தபட்ச தேவைகள் 10 ஆம் வகுப்பு, இடைநிலை, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் 60% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    அனுபவம் வாய்ந்த ஐடி நிபுணர்களுக்கான வேலை வாய்ப்புகள் :

    தற்போது, ​​இந்தியா முழுவதும் சீனியர் இன்ஜினியர், சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியர், டெஸ்ட் லீட் மற்றும் சப்போர்ட் கன்சல்டன்ட் போன்ற பதவிகளுக்கு அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நிறுவனம் நியமித்து வருகிறது.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் https://careers.techmahindra.com/ லிங்கில் சென்று விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: