ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு..! - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு..! - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

TN job alert : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இதரப் பணிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இதர அலுவலக காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக பணி விவரங்களை இதில் காண்போம்.

  பணியின் விவரங்கள்:

  பல்வேறு பாடப்பிரிவில் 22 பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத இதர அலுவலக பிரிவில் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பேராசிரியர் பணி விவரங்கள்:

  பாடப்பிரிவுகாலிப்பணியிடங்கள்
  Applied Psychology3
  Economics2
  Education1
  Epidemiology & PublicHealth1
  Geography1
  Geology1
  History1
  Horticulture1
  Law1
  Materials Science1
  Mathematics1
  Music2
  Social Work2
  Statistics and Applied1
  Mathematics1
  Tourism & HospitalityManagement2
  Physical Education andSports1
  மொத்தம்22

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

  கல்வித்தகுதி:

  அனைத்து பாடப்பிரிவு பேராசிரியர் பணிகளுக்கும் பிரிவிற்கு ஏற்ப Ph.D.,தேர்ச்சி அவசியமாய் இருக்கிறது. இதர விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  பேராசிரியர் பணிகளுக்கு ஆன்லைனில் சமர்த் போர்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி வகுப்பினர் ரூ.500/- விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் ரூ.750/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://cutnrec.samarth.edu.in/

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.12.2022.

  பேராசிரியர் அல்லாத பணிகளுக்கான விவரங்கள்:

  பணியின் பெயர்காலிப்பணியிடங்கள்
  Hindi Officer1
  Section Officer1
  Private Secretary3
  Senior Technical Assistant(Laboratory)1
  Junior Engineer(Electrical)1
  Assistant1
  Personal Assistant1
  Security Inspector1
  Statistical Assistant1
  Lower Division Clerk5
  Multi-Tasking Staff2
  Library Attendant1
  Laboratory Attendant2
  மொத்தம்21

  வயது வரம்பு:

  ஹிந்தி அதிகாரி பதவிக்கு அதிகபட்ச வயது 40 ஆகும். இதரப் பணிகளுக்கு வயது அதிகபட்ச வயது 35 ஆகும்.

  கல்வித்தகுதி:

  இப்பணிகளுக்குத் தேவையான பிரிவுகளில் முதுகலை மற்றும் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Multi-Tasking Staff பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அதே போல் Library Attendant பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Library Science சான்றிதழ் படிப்பு தேவை. Laboratory Attendant பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை:

  இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் 2 நிலை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டுத் தேர்வு செய்யப்படுவர்.

  Also Read : தமிழக கால்நடை துறையில் 731 காலிப்பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு சமர்த் போர்டல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி வகுப்பினர் ரூ.500/- விண்ணப்பக்கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர வகுப்பினர் ரூ.750/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://cutnrec.samarth.edu.in/

  விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.12.2022.

  மேலும் விவரங்களுக்கு அறிவிப்பு 1 /அறிவிப்பு 2.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, University