TET - Paper I Result Declared: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டிற்கான முதல் தாள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதல் தாள் தேர்வு கணினி வழித் தேர்வாக கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வில் 1,53,533 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து, அக்டோபர் மாதம் 28ம் தேதி தேர்வுக்கான தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative key Answer) வெளிடயிடப்பட்டது.
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 28.10.2022 முதல் 31.10.2022 தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபனைகளை (Objection) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அனைத்து ஆட்சேபனைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குபின் பாட வல்லுநர்குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வர்களது கணினி வழித் தேர்வினை மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
தற்பொழுது தேர்வு எழுதிய அனைத்து தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புடன் வெளியிடப்பட்டுளளது.
இதையும் வாசிக்க: SSC CHSL 2022: 12ம் வகுப்பு பாஸா? ரூ.92ஆயிரம் வரை சம்பளம்.. 4500 காலியிடங்களுக்கான விவரம் இதுதான்!
TNTET Paper I தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி?
ஆசிரியர் தேர்வு வாரியத்தின், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளலாம்.
1. முகப்பு பக்கத்தில் login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
2. பதிவு எண், கடவு சொல்லை சமர்ப்பிக்க வேண்டும்.
3.'Dashboard'-ஐ கிளிக் செய்யவும்.
4.'Score Card' ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TNTET