ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

TRB : 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு... 15,000 காலி பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

TRB : 2023 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு... 15,000 காலி பணியிடங்கள்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியம்

Teacher Recruitment Board: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் வெளிவரும். அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு ஆசிரயர் தேர்வு வாரியம் 2023ம் ஆண்டுக்கான தேர்வு திட்ட அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் காலியாக உள்ள 4000  உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகும் என்றும், அதற்கான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

6553  Secondary Grade Teachers (SGT) : 6553 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் மார்ச்  மாதம் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மே மாதம்  நடைபெறும்.

3587 BT Assistants (Graduate Teachers): 3,587  பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். தேர்வு வரும் ஜுன்  மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor in Government Engineering Colleges: அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஜுன் மாதம் வெளியிடப்படும். இதன்மூலம் , 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I & II குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசமபர் மாதம் வெளிவரும். அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க:  TNPSC UPSC Current Affairs 1: போட்டித் தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய தலைப்புகள் இதோ!

First published:

Tags: Recruitment, Teacher