Home /News /employment /

10,371 ஆசிரியர்கள் நியமனம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்

10,371 ஆசிரியர்கள் நியமனம்; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்

TET Recruitment 2022

TET Recruitment 2022

TET Recruitment : இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். இந்த ஆட்சேர்ப்பின்  மூலம்  3987 காலி இடங்கள் நிரப்பப்படும்

    2022 வருட ஆசிரியர் நியமனங்களுக்கான திருத்தப்பட்ட உத்தேச தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தாண்டில், 10371 பேரை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ள இருக்கிறது.

    திருத்தப்பட்ட அட்டவணையின் படி, 

    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ( BT Assistants (Graduate Teachers) : பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 1874 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.    

    இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் (Secondary Grade Teachers (SGT) :  இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும். இந்த ஆட்சேர்ப்பின்  மூலம்  3987 காலி இடங்கள் நிரப்பப்படும். இதற்கான தேர்வுகள் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.



    மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT Lecturers):  மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு இம்மாதத்தில் வெளியிடப்படும். இதன் மூலம், 155 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். தேர்வுகள் டிசம்பர் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.     

    உதவி பேராசிரியர் பணியிடங்கள் (Assistant Professor in Government Arts and Science Colleges & College of Education):  கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இதன்மூலம் , 1358 இடங்கள் நிரப்பப்படஉள்ளது . ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தேர்வு தேதிகள் உள்ளிட்ட அறிவிப்புகள் கொடுக்கப்படும்.

    இதையும்  வாசிக்கEducation Series 2: எந்த துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உள்ளன

    விரிவுரையாளர் பணி (Lecturers in Government
    Polytechnic Colleges )
    : தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதன்மூலம் , 493 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தேர்வு தேதிகள் உள்ளிட்ட  அறிவிப்புகள் கொடுக்கப்படும்.

    பொறியியல் கல்லூரிகளில் உதவி  பேராசிரியர் பணி (Assistant Professor in Government Engineering Colleges):  அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.இதன்மூலம் , 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தேர்வு தேதிகள் உள்ளிட்ட  அறிவிப்புகள் கொடுக்கப்படும்.

    இதையும் வாசிக்க:  Education Series 1: பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?

    முன்னதாக, ஆசிரயர் தேர்வு வாரியம்,  2022 வருட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான   அறிவிக்கை  இந்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள்  பெறப்பட்டன. ஆகஸ்ட் மாதம் 25 31  வரை உள்ள தேதிகளில் தாள்- Iக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Govt teachers, Jobs

    அடுத்த செய்தி