Home /News /employment /

முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

முதுநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு தேர்ச்சி பெற்றவர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்

முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்

தேர்வாணையத்தின் trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தெரிவுப் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    புவிவியல்,இயற்பியல்,வரலாறு ஆகிய மூன்று பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுப் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தெரிவுப் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    முன்னதாக, 2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்,உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினிப் பயிற்றுநர் நிலை - 1  நேரடி நியமனத்திற்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை  ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.  இதற்கான, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதத்தில் கணினிவழித் தேர்வுகள் (Computer Based Test) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    இதற்கிடையே, முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்றதாக  தெரிவித்த  சில விண்ணப்பதாரர்கள், அதற்குரிய ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யவில்லை என்றும், அத்தகைய மாணவர்கள் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 30ம் தேதி இணைய வழியாக தங்களை ஆவணங்களை பதிவேற்றம்  செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இதனையடுத்து, ஆள் சேர்ப்பு அறிவிப்பில்  குறிப்பிட்டுள்ள 17 பாடங்களுக்கு  சான்றிதழ் சரிபாரிப்பு பணிகள் கடந்த 2ம்  முதல் 4ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டன.

    இதையும் வாசிக்க: இளைஞர்கள் கவனத்திற்கு..! - சென்னையில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள்

    இந்நிலையில், புவிவியல்,இயற்பியல்,வரலாறு ஆகிய மூன்று பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுப் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தெரிவுப் பட்டியலை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Govt teachers, Recruitment, Teacher

    அடுத்த செய்தி