Home /News /employment /

TNTET Exam 2022: ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

TNTET Exam 2022: ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது

  • Last Updated :
    ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

    தமிழகத்தில் 2022-ம் ஆண்டிற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2-க்கு மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் கடைசி ஒரு வாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சர்வர் முடங்கியதால் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய முடியவில்லை. பி.எட். பட்டப்படிப்புக்கான முதலாமாண்டு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாததால் அவர்களாலும் விண்ணப்பிக்க முடியவில்லை.

    சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

    இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில்,"ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 11 எழுதுவதற்கான அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் 14.03.2022 முதல் 13.042022 வரை பெறப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவினை நீட்டிக்குமாறு கோரிக்கைகள் தொடர்ந்து பெறப்பட்டதை அடுத்து 18.04.2022 முதல் 26.04.2022 வரை விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது".

    இதற்கிடையே, பி.எட். இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு (Diploma in Teacher Elucation) இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate-னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் முன்னதாக தெரிவித்திருந்தது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கை 07.03.2022 அன்று வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணைய தளம் வாயிலாக 14.03.2022 முதல் பெறப்பட்டு வருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கு இதுவரையில் 4 லட்சத்து 28ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

    மேலும், விவரங்களுக்கு இந்த   இணைப்பைக் கிளிக் செய்யவும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: School Teacher, TET

    அடுத்த செய்தி