முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 2331 உதவிப் பேராசிரியர்கள் காலியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து: ஆசிரியர் தேர்வு வாரியம்

2331 உதவிப் பேராசிரியர்கள் காலியிடங்களுக்கான அறிவிப்பு ரத்து: ஆசிரியர் தேர்வு வாரியம்

மாதிரி படம்

மாதிரி படம்

2331 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது - ஆசிரியர் தேர்வு வாரியம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியில் கல்லூரிகளில்  உள்ள 2331 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த 2019ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆள்சேர்க்கை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், மொத்தமாக 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக உதவி பேராசிரியர் நியமனங்கள் நடத்தப்படாத நிலையில், மாநிலத்தில் 7000க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு காலியாகவுள்ள 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. நேர்காணல் மூலம் தெரிவு முறை  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.  44,000  பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இருப்பினும், பல்வேறு குளறுபடிகள் காரணமாக நியமன நடவடிக்கைகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, " விரைவில் 4000 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், நேர்காணல் முறை இல்லாமல் எழுத்துத் தேர்வின் மூலம் நியமனம் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம், இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர்கள் 2331 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிக்கை (அறிவிக்கை எண். 12/2019, நாள். 28.08.2019 மற்றும் 04.10.2019) ரத்து செய்யப்பட்டு, தற்போது 4000 உதவிப்பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை (Fresh Notification) தேர்வு வாரியத்தால்  வெளியிடப்பட வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 2331 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 2022-23 கல்வியாண்டிற்கு தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 1895 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய உயர்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக உதவிப் பேராசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கு காலதாமதமாகும் என்பதால் மாணவர்களின்' நலன் கருதி இடைக்கால நடவடிக்கையாக இந்த நியமனங்கள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Assistant Professor