2023ம் ஆண்டில், ஆசிரியர் பணியிட போட்டித் தேர்வுகள் குறித்தான ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதில், 15,149 காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது. இந்த அறிவிப்பு போட்டித் தேர்வர்களுக்கு மகிழ்ச்சி அமையும் விதமாக இருந்தாலும், இந்த ஆண்டு (2022) போல் அல்லாமல் அறிவிக்கப்பட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சட்டக்கல்வி ஆகிய மூன்று துறைகளில் போட்டித் தேர்வுகளின் மூலம் திறமைமிக்க ஆசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்தி வருகிறது. ஓவ்வொரு ஆண்டும் நியமன அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
2022 ஆம் ஆண்டில் 9494 காலிப்பணியிடங்களுக்கான ஆண்டுத் திட்டத்தைஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன் பின், கடந்த ஜுலை மாதம் திருத்தப்பட்ட ஆண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த புதிய அட்டவணையின் கீழ், 1874பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, 10371 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த அட்டவணையின் கீழ், 2407 காலிப் பணியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் நிரப்பப்பட்டன.
ஆசிர்யர் தகுதித் தேர்வை பொறுத்த வரையில், தாள்- Iக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுள்ளன. தாள் - II தேர்வு தொடர்பான அறிவிப்புகள் இதுநாள் வரையில் வெளியிடப்படவில்லை.
எனவே, கடந்தாண்டு தேர்வு திட்ட அட்டவணையில் போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு இருந்தும், காலிப் பணியிட அறிவிக்கை வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றாத்தைச் சந்தித்தனர். குறிப்பாக, கலை, அறிவியல் மற்றும் கல்வியில் துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆயரக்கணக்கான தேர்வர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே, இந்த முறையாவது ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.