Home /News /employment /

ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு - 9,494 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு - 9,494 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TRB : 7 வகையான பணிகளுக்கு 9,494 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 2022ம் ஆண்டு நடத்தப்படும் தேர்வுகளின் உத்தேச வருடாந்திர கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், கல்லூரி உதவிப்பேராசிரியர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, மாநகராட்சிகள் மற்றும் பிறதுறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்கள் தேர்வுகளுக்கு உத்தேச தேர்வு நாட்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

    மேலும், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. 7 வகையான பணிகளுக்கு 9,494 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் இந்த உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த உத்தேச பட்டியல் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    அதன்படி 2,407 காலிப்பணியிடங்கள் உள்ள முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பிப்ரவரி 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வு ஏப்ரல் 2ம் வாரத்தில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4,989 காலியிடங்கள் கொண்ட இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு, ஜூன் 2வது வாரத்திலும், 167 காலிப்பணியிடங்கள் உள்ள SCERT விரிவுரையாளர்கள் தேர்வு, ஜூன் 2வது வாரத்தில் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    Must Read : எம்.பி.பி.எஸ். படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு

    அரசுக்கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள  1,334 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் விதமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும் எனவும், 493 காலி பணியிடங்கள் கொண்ட அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு, நவம்பர் 2வது வாரத்திலும், 104 காலிப்பணியிடம் உள்ள அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு டிசம்பர் 2வது வாரத்திலும் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Exam, Government jobs, Job vacancies, Teacher

    அடுத்த செய்தி