Home /News /employment /

விடா முயற்சின்னா இதுதான்! தந்தை தினக்கூலி; மகன் டீ விற்று கோச்சிங் இன்றியே ஐஏஎஸ் பாஸ் செய்து சாதனை

விடா முயற்சின்னா இதுதான்! தந்தை தினக்கூலி; மகன் டீ விற்று கோச்சிங் இன்றியே ஐஏஎஸ் பாஸ் செய்து சாதனை

டீ விற்று, சுயமாகவே படித்து கலெக்டரான ஹிமான்ஷு

டீ விற்று, சுயமாகவே படித்து கலெக்டரான ஹிமான்ஷு

உத்தரபிரதேச மாநிலம் பரைலியைச் சேர்ந்த ஹிமான்ஷு குப்தா ஒரு காலத்தில் உள்ளூர் தேநீர் கடையில் டீ விற்றவர் இன்று ஐஏஎஸ் பாஸ் செய்து கலெக்டராக பதவி பெற்றுள்ளார். இவரது சாதனை யுபிஎஸ்சி எழுதும் அனைவருக்கும் ஒரு பாடமாகும்.

 • News18
 • Last Updated :
  உத்தரபிரதேச மாநிலம் பரைலியைச் சேர்ந்த ஹிமான்ஷு குப்தா ஒரு காலத்தில் உள்ளூர் தேநீர் கடையில் டீ விற்றவர் இன்று ஐஏஎஸ் பாஸ் செய்து கலெக்டராக பதவி பெற்றுள்ளார். இவரது சாதனை யுபிஎஸ்சி எழுதும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். எதற்கெடுத்தாலும் கோச்சிங் செண்டர் ஆரம்பித்து மக்களிடம் லட்சக்கணக்கில் சுரண்டும் நிறுவனங்களை நம்பாமல் தானாகவே படித்து கலெக்டர் ஆவது என்றால் இமாலய சாதனைதான்!

  ஆனால் சாதாரணமாக இந்தச் சாதனையை அவர் செய்து விடவில்லை, பல கடினமான தருணங்களை எதிர்கொண்டு 2 முறை ஐஏஎஸ் பரீட்சையில் தோல்வி அடைந்து 3வது முறை தேர்ச்சி பெற்று இன்ற் கலெக்டர் ஆகியுள்ளார் ஹிமான்ஷு. இருமுறை தோல்வியடைந்தாலும் வெறுப்படைந்து விட்டு விடவில்லை, விடா முயற்சியுடன் மீண்டும் எழுதி மூன்றாவது முறை 2019-ம் ஆண்டு 304வது ரேங்கில் பாஸ் செய்து கிளியர் செய்தார் ஹிமான்ஷு.

  ஹிமான்ஷுவின் தந்தை தினக்கூலி, ஆனால் எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு சிறிய டீ ஷாப்பை அங்கு திறந்தார். ஹிமான்ஷு தன் குடும்பத்தையும் ஆதரிக்க வேண்டும் தனது இமாயலய இலக்கான ஐஏஎஸ்-யும் பாஸ் செய்ய வேண்டும். டீ கடையில் தந்தைக்கு உதவிபுரிந்த படியே படிக்கவும் தொடங்கினார். தினமும் எல்லா செய்தித்தாள்களையு, ஒன்று விடாமல் படித்து விடுவார். மற்ற மாணவர்கள் போல் டெல்லிக்கு சென்று தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளாமல், இவர் கோச்சிங் இல்லாமலேயே சுயமாகவே ஆன்லைன் நோட்ஸ், ஆன்லைன் வீடியோ வகுப்புகள் மூலமாகவே தானாகவே படிக்கத் தொடங்கினார் இந்த நவீன ஏகலைவன்.

  எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவு, வெறி, லட்சியம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு களத்தில் இறங்கினார். முதன் முதலாக மெட்ரோ நகரத்தைப் பார்த்த அவர் டெல்லியில் உள்ள இந்து கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றார். அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி ஸ்காலராக சேர்ந்தார். இது ஒரு சிறந்த வழி என்கிறார் ஹிமான்ஷு. ரிசர்ச் ஸ்காலராகச் சேர்ந்தால் மாதாந்திர உதவித்தொகையும் கிடைக்கும் பெரிய கல்விக்கான ஒரு அறிவுச்சூழலும் கிடைக்கும் என்கிறார் ஹிமான்ஷு.

  முதல் முறை யுபிஎஸ்சி. எழுதிய போது ரேங்கில் பெரிய அளவில் வராததால் இந்திய ரயில்வே சர்வீஸ்தான் அவருக்கு கிடைத்தது. 2019-ல் எப்படியாவது தன் 3வது விடா முயற்சியில் ஐஏஎஸ் தேர்வை கிளியர் செய்வது என்று திட்டம்போட்டு படித்தார், அவரது கடின உழைப்புக்கான பலனாக 304வது ரேங்க் எடுத்து ஐ.ஏ.எஸ். ஆனார்.

  அவர் என்ன கூறுகிறார் எனில், “தேர்வுக்குத் தயாராக பெரிய நகரத்துக்குச் செல்ல வேண்டியதில்லை, உலகம் நம் கையில் இருக்கிறது, இருந்த இடத்திலிருந்தே வாசிக்கலாம், பரீட்சைகளை கிளியர் செய்யலாம். நகரத்தில் தான் எல்லா வசதியும் உள்ளது என்பதெல்லாம் ஒன்றுமில்லை. இருந்த இடத்திலிருந்து ஐஏஎஸ் மட்டுமல்ல எந்தஒரு பெரிய தேர்வையும் அனாயசமாக பாஸ் செய்யலாம்” என்கிறார் ஹிமான்ஷு.

  இவரது பயணம் இன்றைய கடினமான உலகில் அனைவருக்குமான ஒரு பாடமாகும். எதற்கெடுத்தாலும் கோச்சிங் செண்டர், பெருநகரத்தில் இருந்தால்தான் பெரிய படிப்பு படிக்க முடியும், என்று எவ்வளவோ கற்பிதங்கள் நம்மிடையே இருக்கும் போது ஹிமான்ஷு அந்தக் கற்பிதங்களை உடைத்து உத்தரப் பிரதேச பரைலியில் தன் டீக்கடையிலிருந்தே ஐஏஎஸ் படித்து கலெக்டராவார்.

  இதையும் படிங்க: வங்கி வேலைத் தேடுபவரா நீங்கள்? - உங்களுக்கான அறிவிப்பு இதோ

  தெருவிளக்கில் படித்து பண்டிதரானார் என்று ஒரு காலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதுபோல் ஹிமான்ஷுவாக வேண்டுமா, டீக்கடையிலும் படித்து கலெக்டராகலாம் என்பது புதிய சொலவடையாக இனி பயன்படுத்தலாம்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Education, UPSC, Uttar pradesh

  அடுத்த செய்தி