ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்த நிதியாண்டில் 40,000 இளைஞர்களை பணியமர்த்த திட்டம் - டிசிஎஸ்

இந்த நிதியாண்டில் 40,000 இளைஞர்களை பணியமர்த்த திட்டம் - டிசிஎஸ்

TCS

TCS

முன்னதாக, Insightful Data Scientists, Expert Risk Modellers, Intelligent Model Validators,Adept Statisticians ஆகிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  டிசிஎஸ் நிறுவனம் வரும் நிதியாண்டில் 40,000க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

  முன்னதாக, டிசிஎஸ் நிறுவனம், 2022 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை நேற்று வெளியிட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாத், "நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்கப்பட்ட அளவு இருந்தது .நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 5,92,125 ஆகும்.

  கடந்த  நிதியாண்டில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான அனுபவம் இல்லாத இளைஞர்கள் (Fresher's) பணியமர்த்தியுள்ளோம். 40,000 இளைஞர்களை நியமிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், நிறுவனம்  வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கிறது. வரும் நிதியாண்டிலும் , 40,000 இளைஞர்களை பணியமர்த்த  உள்ளோம் " என்று தெரிவித்தார்.

  TCS jobs | அனுபவம் இல்லாத Fresher-களுக்கு டிசிஎஸ்-ல் ஏராளமான வேலை - முழு விவரம்

  முன்னதாக,  Insightful Data Scientists, Expert Risk Modellers, Intelligent Model Validators,Adept Statisticians ஆகிய பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்ததது.  முதுகலை (M.A). கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் ஆகிய பிரிவிகளில் முது அறிவியல் (M.Sc.) பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொருளாதார படிப்பில் முதுகலை (MA Economics) பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஏப்ரல் 20 ஆகும். 18 முதல் 28 வயது வரை உள்ள இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.

  முன்னதாக, இன்ஃபோசிஸ் நிறுவனம், 22 நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்கான வரவு செலவு அறிக்கையை வெளியிட்டது. 2022 நிதியாண்டில், நிறுவனத்தின் டிஜிட்டல் ( உதாரணமாக, Cloud computing) சந்தையின் மதிப்பு 41.2% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தை விட 38.8 சதவீத நேர்மறையான வளர்ச்சியாகும். நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் 5686 கோடியாக உள்ளது  எனத்  தெரிவித்தது.

  அறிக்கை வெளியிட்ட பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய், " 2022 நிதியாண்டில் மட்டும் 85,000 அனுபவம் இல்லாத இளைஞர்கள் (Fresher's) பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதில், இந்தியாவில் மட்டும் 54,30 பேர் உள்ளனர். வரும் நிதியாண்டில், 50000க்கும் மேற்பட்ட இளைஞர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றம் விகிதம் 27.7 % ஆக உள்ளது" என்று தெரிவித்தார்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: IT JOBS, TCS