ஐடி துறையில் புதிதாக 28,000 பேரை பணியில் அமர்த்த டிசிஎஸ் திட்டம்!

ஐடி துறையில் புதிதாக 28,000 பேரை பணியில் அமர்த்த டிசிஎஸ் திட்டம்!
28,000 பேருக்கு வாய்ப்பளிக்கிறது டிசிஎஸ்
  • News18
  • Last Updated: October 13, 2018, 9:02 PM IST
  • Share this:
சாஃப்ட்வேர் துறையில் வேலை தேடுபவர்களுக்காக டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 28,000 பேரை அந்த நிறுவனம் பணியில் அமர்த்த உள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.        

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (TCS) லிமிடெட் இந்திய சாஃப்ட்வேர் நிறுவனங்களில் முதன்மையாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. செப்டம்பர் 2018 நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தில் சுமார் 4 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த நிறுவனம் நடப்பாண்டு சுமார் 28,000 பேரை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் மனித வளத் துறையின் தலைவர் அஜய் முகர்ஜி கூறியதாவது: தொழில் மற்றும் வர்த்தக ரீதியாக டிசிஎஸ் நிறுவனம் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. இதன் காரணமாக மேலும் பலரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளோம். நடப்பாண்டின் முதல் பாதியில் (அதாவது கடந்த 6 மாதங்களில்) மட்டும் சுமார் 16,000 பேரை வேலைக்கு எடுத்துள்ளோம் என்றார் அஜய் முகர்ஜி.


இந்த வகையில் அடுத்த 6 மாதங்களில் மேலும் 12,000 பேருக்கு டிசிஎஸ் நிறுவனம் வேலைவாய்ப்பு அளிக்கவுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு தலா 20,000 பேரை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் டிசிஎஸ் நிறுவனம் பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது.
First published: October 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading