• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • MBA ஃபிரஷ்ஷர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கும் TCS நிறுவனம் - எப்படி விண்ணப்பிப்பது?

MBA ஃபிரஷ்ஷர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கும் TCS நிறுவனம் - எப்படி விண்ணப்பிப்பது?

TCS நிறுவனம்

TCS நிறுவனம்

இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் விண்ணப்பதாரரின் வாய்மொழி திறன் (7 கேள்விகள்), அளவு திறன் (20 கேள்விகள்) மற்றும் வணிகத் திறன் (20 கேள்விகள்) ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும்.

  • Share this:
மும்பையை தலைமையகமாக கொண்ட இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), தனது ‘MBA Hiring’ திட்டத்தின் கீழ் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளதாக அறிவித்து இருக்கிறது. 2022-23 நிதியாண்டில் ஐடி நிறுவனத்தில் வேலைக்கு சேர முயற்சிக்கும் Master of Business Administration அதாவது MBA படிப்பை முடித்த ஃப்ரெஷ்ஷர்களிடமிருந்து வேலைக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் TCS நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய வேலைவாய்ப்புகளுக்கு 2020, 2021-ஆம் ஆண்டுகளில் மாஸ்டர் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (MBA) படிப்பை முடித்த மற்றும் வரும் 2022-ஆம் ஆண்டு புதிதாக படிப்பை முடிக்க உள்ள ஃபிரஷ்ஷர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022-23 நிதியாண்டில் ஐடி துறையில் பணியாற்ற விரும்பும் மேலாண்மை பட்டதாரிகளுக்காக இந்த வாய்ப்பு பிரத்தியேகமாக திறக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பை பெற தகுதியானவர்கள் ரிஜிஸ்டர் செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 9-ஆம் தேதி ஆகும். நுழைவு தேர்வுக்கான தேதிகள் பின்னர் TCS நிறுவனத்தால் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இது தொடர்பான செய்தி குறிப்பை வெளியிட்டுள்ள TCS, "இந்த பணியமர்த்தல் செயல்முறை 2 சுற்றுகளை கொண்டது. இதன் முதல் கட்டம் நுழைவு தேர்வு ஆகும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களை வேலைவாய்ப்பிற்காக ரிஜிஸ்டர் செய்து கொண்ட பிறகு இந்த தேர்வு நடத்தப்படும். மேலும் இந்த நுழைவு தேர்வில் மொத்தம் 47 கேள்விகள் கேட்கப்படும்.

இவை அனைத்திற்கும் விண்ணப்பதாரர்கள் பதிலளிக்க 90 நிமிடங்கள் வழங்கப்படும். இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் விண்ணப்பதாரரின் வாய்மொழி திறன் (7 கேள்விகள்), அளவு திறன் (20 கேள்விகள்) மற்றும் வணிகத் திறன் (20 கேள்விகள்) ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் இருக்கும். இந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் இரண்டாம் சுற்றுக்கு, அதாவது நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது :

* TCS NextStep போரட்டலை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

* ஏற்கனவே ரிஜிஸ்டர் செய்த யூஸராக இருந்தால், லாகின் செய்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Apply For Drive என்பதை கிளிக் செய்யவும்.

* புதிய யூஸராக இருப்பின் Register Now என்பதை கிளிக் செய்து 'IT' என்ற கேட்டகிரியை செலக்ட் செய்து விவரங்களை நிரப்பவும். பின் விண்ணப்பப் படிவத்தைச் சப்மிட் செய்து , Apply For Driveஎன்பதை கிளிக் செய்யவும்.

* டெஸ்ட் முறையை Remote-ஆக தேர்வு செய்து பின் Apply பட்டனை கிளிக் செய்யவும்

* அப்ளிகேஷன் ஸ்டேட்டஸை உறுதிப்படுத்த, 'Track Your Application' என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் சரியாக விண்ணப்பித்திருந்தால் 'Applied for Drive' என்று ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும்.

தகுதி:

தேர்வில் பங்கேற்க குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்ச வயது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோர்ஸ்:

2 வருட முழுநேர MBA / MMS / PGDBA / PGDM / கோர்ஸ் -மார்க்கெட்டிங் / ஃபினான்ஸ் / ஆப்ரேஷன்ஸ் / சப்ளை செயின் மேனேஜ்மெண்ட் / இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி / ஜெனரல் மேனேஜ்மெண்ட் / பிஸினஸ் அனலைடிக்ஸ் / ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட்

பர்சன்டேஜ்:

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளோமா (if applicable), பட்டப்படிப்பு மற்றும் / அல்லது முதுகலை தேர்வில் வெற்றிகரமாக முடித்த இறுதி ஆண்டு / செமஸ்டர் ஆகியவற்றில் குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்கள் 60% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அதே போல ஒட்டுமொத்த கல்வி இடைவெளி 2 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வியில் இடைவெளிகள் இருந்தால் அதை தெரிவிப்பது கட்டாயம். கல்வியில் இடைவெளி இருக்கும்பட்சத்தில் சரியான காரணங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் TCS கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: